சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வை தமிழ்நாடு பொது சேவை ஆணையம் நடத்துகிறது.
அதிகாரப்பூர்வஅறிவிப்பு NOTIFICATION
முந்தயவினாத்தாட்கள் QUESTION PAPER
பணியின் பெயர் : கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில் கலெக்டர், வரைவாளர், நில அளவர்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அடிப்பணடயில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வித்தகுதி: இத்தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 ஆண்டுக்கு மேல் இருக்க வேவண்டும். விண்ணப்பிப்பவர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.
குரூப் 4 தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்:
இந்தத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொதுத்தமிழ் / ஆங்கிலம் – 100 கேள்விகள், பொது அறிவு – 75 கேள்விகள் மற்றும் 25 கேள்விகள் கணிதம் மற்றும் நுன்னறிவு சார்ந்த கேள்விகள் அமையும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு மதிப்பிடப்படுகிறது.
பொது அறிவியல், தற்போதைய நிகழ்வுகள், நிலவியல், இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம், இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல், தமிழ்நாட்டின் இயக்கங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம்.