TNPSC GROUP 3

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு குரூப் 3 மற்றும் குரூப் 3 ஏ-ஐ தமிழ்நாடு பொது சேவை ஆணையம் நடத்துகிறது.

அதிகாரப்பூர்வஅறிவிப்பு  NOTIFICATION

முந்தயவினாத்தாட்கள்    QUESTION PAPER

குரூப் – 3 சேவைகள்: தீயணைப்பு நிலைய அதிகாரி பதவியிடம்

வயது வரம்பு: நிலைய அதிகாரி பதவிக்கு குறைந்தபட்ச வயது தகுதி 20 மற்றும் 30 ஆண்டுகள்.

தேர்வு முறை: இதற்கு எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு நடக்கும்.

எழுத்து தேர்வு பின்வரும் பாடங்களை கொண்டு இருக்கும். பொது ஆய்வுகள் 75, பொது ஆங்கிலம் மற்றும் பொது தமிழ் 100

திறன் மற்றும் மன திறன் தேர்வு 25. அதிகபட்ச மதிப்பெண் 300.

குரூப் 3 தேர்வில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் – 90 மதிப்பெண். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணல் 40 மதிப்பெண்களுக்கு இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

பொதுஅறிவு, கணித திறன் , பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பிரிவுகளை கொண்டது.

பொது அறிவு பின்வரும் பாடங்களை உள்ளடக்கியது: வரலாறு, புவியியல், பொருளியல், இந்திய அரசியல் மற்றும் அரசியலமைப்பு, பொது அறிவியல், இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள்.

குரூப் 3A பணியிடம்:

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்

ஸ்டோர்-கீப்பர், தொழில்கள் மற்றும் வணிகத் துறையில் தரம்- II

தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் ஸ்டோர் கீப்பர்

வயது வரம்பு: குரூப் 3A ஆகிய பதவிகளுக்கு தேவைப்படும் வயது 18 முதல் 45 வயது வரை.

கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். அது போக வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு சிறப்பு தகுதிகள் தேவைப்படும்.

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடக்கும்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) ஸ்டோர் கீப்பர் மற்றும் தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு மட்டும்.

எழுத்து தேர்வு மேற்கண்ட முறைப்படி நடக்கும்.