Group II
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு II ஐ தமிழ்நாடு பொது சேவை ஆணையம் நடத்துகிறது. (நேர்காணல் பதவிகள்) (உதவியாளர் உள்ளிட்ட நேர்காணல் இல்லாத பதவிகளுக்குத் தனியாக வேறொரு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது).
அதிகாரப்பூர்வஅறிவிப்பு NOTIFICATION
முந்தயவினாத்தாட்கள் QUESTION PAPER
பணியின் பெயர்: துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறை துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலகர் (பொது) மற்றும் (மாற்றுத் திறனாளிகள்), லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், . டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், தொழிற் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வேளாண்மை விற்பனை துணை மேற்பார்வையாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு -2).
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு: விண்ணப்பிப்பவர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
படிக்க வேண்டிய புத்தகங்கள்: தற்கால நிகழ்வுகள், சமுதாயப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மதாடர்பான தலைப்புகள், இந்தியப் பொருளாதரம் தொடர்பான தலைப்புகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலையும் பண்பாடும்,
பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுய மரியாதை
இயக்கம், இக்கால தமிழ் மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழித் தமிழ், தமிழகததின் சமூகப் பொருளாதார முன்னேற்றம். தமிழக அரசின் நலத்திட்டங்கள்
குரூப்-2 தேர்வானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. மொத்தம் 300 மதிப்பெண்கள். இரண்டாம் கட்ட தேர்வான, முதன்மைத்தேர்வு விரிவாக விடை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு 300 மதிப்பெண்கள். நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
Group II A (Non Interview)
பணியின் பெயர் : தனிப்பட்ட கிளார்க், 2. ஸ்டெனோ டைப்பிஸ்ட், லோயர் டிவிஷன் கிளார்க், உதவியாளர் (பல்வேறு துறையில்).
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும். மேற்கண்ட குரூப் 2 வுக்கான பாடத்திட்டம்தான் இதற்கும்.