வனத்துறையில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்வை தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்துகிறது. அந்த வகையில் வனவர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கான விபரங்களை அறிந்து கொள்வோம்.
வனவர் FORESTER
அதிகாரப்பூர்வ அறிவிப்பு NOTIFICATION
பாடத்திட்டம் SYLLABUS
வன காப்பாளர் / ஓட்டுநர் உரிமத்துடன் வன காப்பாளர் FOREST GUARD AND FOREST GUARD WITH DRIVING LICENCE
அதிகாரப்பூர்வ அறிவிப்பு NOTIFICATION
பாடத்திட்டம் SYLLABUS
வனக்காவலர் FOREST WATCHER
அதிகாரப்பூர்வ அறிவிப்பு NOTIFICATION
பாடத்திட்டம் SYLLABUS
வனவர் பதவிக்கு கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அறிவியல் அல்லது பொறியியலில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும் (B.sc / BE/B.Tech).
வயது வரம்பு: 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் பிரிவுக்கு ஏற்ப தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: வனவர் பதவிக்கான தேர்வு இரண்டு (Paper I and Paper II) தாள்களைக்கொண்டது.
தாள் ஒன்று (Paper I) என்பது பொது அறிவு, திறன், மன திறன், தரவு பகுப்பாய்வு, அடிப்படை ஆங்கிலம், அடிப்படை தமிழ் மொழி ஆகியவற்றை உள்ளடக்கியது. தேர்வுக்கான நேரம் 3 மணிநேரம் ஆகும். மதிப்பெண்கள் 100 ஆகும்.
தாள் இரண்டு (Paper II) என்பது General Science ஐ உள்ளடக்கியது. இந்த தேர்வுக்கான நேரமும் 3 மணிநேரம். மதிப்பெண்கள் 100 ஆகும்.
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 30% (for BC’s, BCMs, MBC’s, / DC’s, SC’s, SC(A)’s, ST’s) and 40% (for others) காலை மற்றும் மாலை என இருவேளை தேர்வு நடைபெறும்.
உடல் தகுதியாக உயரம் 163 செ.மீ., பழங்குடியினர் 152 செ.மீ. இருக்கவேண்டும். பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 145 செ.மீ இருத்தல் வேண்டும். தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வில் அதிக மதி்ப்பெண் எடுக்க வேண்டும். ஆண்கள் 4 மணி நேரத்தில் 25 கிமீட்டர் தூரம், , பெண்கள் 16 கி.மீ. தூரமும் நடந்து காட்டவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வனவர்கள் வனக் கல்விக் கூடத்தில் வனவியல் கல்வி கற்பிக்கப்படுகிறது .பயிற்சிகாலம் 18 மாதங்கள் இதில் வனம் மற்றும் வேளாண்மை சம்பந்தப்பட்ட 35 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மற்ற முறை/ விண்ணப்பங்களின் படிவம் நிராகரிக்கப்படும். இதையடுத்து இணையதளம் மூலமாக தேர்வு நடத்தப்படும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, நடந்து செல்வதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
விண்ணப்பதாரர் தனது உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள மருத்துவ வாரியத்தை திருப்திப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வனத்துறையில் கடினமான வெளிப்புற வேலைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் திறன் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வனத்துறையில் வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணி:
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு: குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் பிரிவு படி தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி: வனக்காப்பாளர் பணிக்கு குறைந்தபட்சமாக, மேல்நிலைப் பள்ளிப்படிப்பில் பிளஸ்டூ-வில் தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருத்தல் வேண்டும்.
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு நேர்காணல் நடத்தப்படாது. 150 மதிப்பெண்கள் கொண்ட ஒரே தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு குறைந்தபட்சமாக, மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் பிளஸ்டூ-வில் தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருத்தல் வேண்டும். அத்துடன் தகுதி பெற்ற போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமத்தினை பெற்றிருத்தல் வேண்டும். வாகன பொது பழுதுநீக்கம் குறித்த அடிப்படை அனுபவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுகள் நடைபெறும் முறை: வனக்காவலர், வனக்காவலர் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் வனக் காவலர் பணிக்கான தேர்வுக்கட்டணம் 300 ரூபாய் ஆகும். SC/ST பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் 150 ரூபாய். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும். வங்கியின் மூலமாகவோ, போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ செலுத்த முடியாது என்ற திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு ஏற்றார் போல் விண்ணப்பதாரர்கள் தயார்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் தேர்வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, பொறுமை சோதனை தேர்வு ஆகியவை நடத்தப்படு. இறுதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்:
விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தங்களின் படத்தை ஸ்கேன் செய்திருக்க வேண்டும். மேலும் புகைப்படம், கையொப்பம் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் ஆகியவற்றை சிடி, டிவிடி, பென் தயாராக வைத்திருக் வேண்டும்.
ஸ்கேன் செய்யப்பட்ட சமீபத்திய வண்ண பாஸ்போர்ட் அளவு இருக்க வேண்டும். புகைப்படம் (20-50 kb அளவுள்ள JPG/JPEG வடிவம்) மற்றும் கையொப்பம் (JPG/JPEG அளவு 10-20 KB)ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி தனித்தனியாக இருக்க வேண்டும். கையெழுத்து, புகைப்படம் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பதிவு செய்வதற்கு சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் கட்டாயம் தேவை. முடிவுகள் அறிவிக்கப்படும் வரை மின்னஞ்சல் ஐடி செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விண்ணப்பத்திற்கு ஒரு மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதேபோன்ற மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைலைப் பயன்படுத்தும் விண்ணப்பதாரரின் விண்ணப்பம்
எண் ஏற்கப்படாது. நிராகரிக்கப்படும். எனவே உங்கள் மின்னஞ்சல் ஐடியை வேறு யாருக்கும் பயன்படுத்தக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ் நகல்களை எங்கு வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் அவை தேவையான ஒன்றாகும்.
பெயர் உட்பட ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். விண்ணப்பதார் பெயர், பிரிவு, கல்வித் தகுதி, பிறந்த தேதி. முகவரி, மின்னஞ்சல் ஐடி, தேர்வு மையம் ஆகியவை.
இறுதி மற்றும் குறிப்பிடப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்படாது.