தமிழ்நாடு மாநில நிர்வாகத்தில் குரூப் 1 சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுதான் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 என்று அழைக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சமாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு NOTIFICATION
பாடத்திட்டம் SYLLABUS
முந்தய வினாத்தாட்கள் QUESTION PAPER
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட தகுதி எஸ்.எஸ்.எல்.சி மற்றும் எச்.எஸ்.சி(HSC) அல்லது (அதற்கு சமமான) + யு.ஜி(UG) படிப்பின் வரிசையில் தேவையான தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும். அதிகபட்ச வயது 37. எஸ்சி /எஸ்டி / பிசி/எம்பிசி-யினருக்கு 32 ஆண்டுகள் அதிகபட்சமாக இருக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது பிரிலிம்ஸ் (முதன்மை தேர்வு), மெயின்ஸ் (இறுதித்தேர்வு) தனிப்பட்ட நேர்காணல் ஆகியவை ஆகும். முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். முதற்கட்ட தேர்வு இறுதி தேர்வு பட்டியலில் பரிசீலிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதில் முதல் கட்ட தேர்வு( Preliminary Examination)- பொது ஆய்வுகள் (General Studies) 175 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். 262.5 மதிப்பெண்கள். மனப்பான்மை மற்றும் மனதிறன் (Aptitude & Mental Ability) பகுதியில் 25 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இதற்கு 37.5 மதிப்பெண்கள். இப்படி மொத்தம் 200 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கு 300 மதிப்பெண்கள்.
இரண்டாம் நிலை: இறுதி தேர்வு (Main Written Examination) என்று அழைக்கப்படுகிறது. தாள் -1, இதற்கு 250 மதிப்பெண்கள். தேர்வு எழுதும் நேரம் – 3 மணிநேரம். இந்த தேர்வுக்கான தலைப்புகள் கீழ்வருமாறு:
இந்தியாவின் நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம், பொது திறன் மற்றும் மன திறன், இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம்
இரண்டாம் தாளுக்கு 250 மதிப்பெண். தேர்வு எழுதும் நேரம் 3 மணிநேரம். இதில் தலைப்புகள் இந்திய அரசியல் மற்றும் உலகெங்கிலும் வளர்ந்து வரும் அரசியல் போக்குகள் இந்தியாவையும் இந்தியாவின் புவியியலையும் பாதிக்கின்றன, தமிழ் மொழி, தமிழ் சமூகம் – இது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் / ஆங்கில மொழி
தமிழ். தமிழகத்திற்கு சிறப்பு குறிப்புடன் யூனியன் மற்றும் மாநிலங்களின் நிர்வாகம்
மூன்றாம் தாளுக்கு தலைப்புகள்: தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்போதைய நிகழ்வுகள், தற்போதைய பொருளாதார போக்குகள்: இந்திய பொருளாதாரம் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் தாக்கம் இந்தியா மீது சமூக – இந்தியாவில் பொருளாதார சிக்கல்கள் / தமிழ்நாடு. இதற்கான மதிப்பெண் 250.
நிலை மூன்று என்பது நேர்காணல் (Interview), அதாவது வாய்வழி சோதனை. இதற்கு 100 மதிப்பெண்கள்.
இறுதி தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே நேர்காணல் அல்லது வாய்வழி சோதனைக்கு தகுதியானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிகளின் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
துணை கலெக்டர் (டி.சி), துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி),
உதவி ஆணையர் (ஏசி வணிக வரி), கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்).
படிக்க வேண்டிய புத்தகங்கள்:
குரூப் ஒன் தேர்வை பொருத்தவரைக்கும் சரியான புத்தகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அத்துடன் அவற்றை முறையாக படிக்க வேண்டும். அதுவே வெற்றிக்கான வழியாகும். பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும், பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி இயக்கம், திறனறிவும் மனகணக்கு நுண்ணறிவும்.